இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து நமது முன்னோர்கள் இணைந்து பெற்ற சுதந்திரம் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் நிஹாறா
இன மத மொழி வேறுபாடுகளைக் கடந்து இலங்கையர்களாகிய நமது முன்னோரிகள் இணைந்து பெற்ற சுதந்திரத்தையே நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா தெரிவித்தார்.
இலங்கையின் 73வது சுதந்திர தின நிகழ்வுகள் ஏறாவூர் வாவிக்கரைப் பூங்காவில் பிரதேச செயலாளர் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் சுதந்திரக் கொடியை ஏற்றி வைத்து தொடர்ந்து உரையாற்றிய பிரதேச செயலாளர் இன மத மொழி பிரதேச வாதம் கடந்த நமது முன்னோர்களின் இரத்தம் சிந்திய போராட்டம் நாம் அனைவரும் இலங்கையர் எனறு கைகோர்ப்பதற்கு ஒரு முன்னுதாரணமாகும்” என்றார்.
நிகழ்வில் நீண்டகாலமும் அர்ப்பணிப்போடும் பணியாற்றிய அலுவலர்கள் சிலருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பபட்டன.
நிகழ்வில் பிரதேச செயலக அலுவலர்கள் ஏறாவூர் நகர சபை அலுவலர்கள், மட்டக்களப்பு மத்திய கல்வி வலய அலுவலர்கள் உள்ளிட்ட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment