மக்களின் தேவைகள் துரிதமாக நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் - துறைநீலாவணையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தெரிவிப்பு.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் அறிவுரைக்கு அமைவாக அக்கட்சியின் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு சனிக்கிழமை(27) மட்டக்களப்பு மாவட்டம் துறைநீலாவணைக் கிராமத்தில் நடைபெற்றது.
அக்கட்சியின் துறைநீலாவணை அமைப்பாளர் பிரகாஷ் சர்மா தலைமையில் உச்சிமா காளியம்மன் ஆலய முன்றலில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் தமிழ் மக்கள் கட்சியின் பிரதிச் செயலாளர் மற்றும் ஜெயராஜ் மற்றும் பிரதி அதிபர் எஸ்.சசிதரன், கட்சியின் உறுப்பினர்கள், பொது அமைப்பின் பிரதி நிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது கட்சியின் பிரதிச் செயலாளர் மக்களின் தேவைகளை கேட்டறிந்ததுடன் துரிதமாக தேவைகள் நிவர்த்தி செய்து கொடுக்கப்படும் என மக்கள் மத்தியில் உறுதியளித்தார்.
0 Comments:
Post a Comment