4 Feb 2021

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு - மட்டக்களப்பு சிறையிலிருந்து மூவர் விடுவிப்பு.

SHARE

சுதந்திர தினத்தை முன்னிட்டு 146 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு - மட்டக்களப்பு சிறையிலிருந்து மூவர் விடுவிப்பு.

தந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் உள்ள சிறைகளிலுள்ள  146 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு வியாழக்கிழமை(04) விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலும் 03 கைதிகள் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் மூவரும் ஆண் கைதிகளென சிறைச்சாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.

சிறு குற்றமிழைத்தவர்கள் மற்றும் தண்டப்பணம் செலுத்த முடியாது சிறைத்தண்டனை அனுபவிப்பவர்களுக்கே இப்பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






SHARE

Author: verified_user

0 Comments: