26 Feb 2021

களுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து மனித தலை மீட்பு.

SHARE

களுவாஞ்சிகுடியில் குடியிருப்பு காணியொன்றிலிருந்து  மனித தலை மீட்பு.

மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவாஞ்சிகுடி தெற்கு, பழைய மக்கள் வங்கி வீதியில் அமைந்துள்ள  குடியிருப்பு காணியொன்றில் வீசப்பட்டிருந்த அழுகிய நிலையிலுள்ள  மனித தலையொன்று வெள்ளிக்கிழi(26) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.

வியாழக்கிழi(25) மாலை குறித்த வீட்டு உரிமையாளரின் முன்னால் அமைந்துள்ள வீதியால்  மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவர் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் குறித்த வீட்டு உரிமையாளருக்கு மோட்டார் சைக்கிளில்  சென்ற நபர்கள் கொலையச்சுறுத்தல் விடுத்து சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வீட்டு உரிமையாளர் களுவாஞ்சிகுடி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த சம்பவமானது வியாழக்கிழமை இரவு 7.00 மனியளவில் இடம்பெற்றதனைத்தொடர்ந்து குறித்த நபர்களே மனித தலையொன்றினை கொண்டு சென்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் வீசி விட்டு சென்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிசாருக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து, ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுள்ளதுடன், களுவாஞ்சிகுடி பிரதேசத்தை சேர்ந்த 3 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

குறித்த மனித தலை களுவாஞ்சிகுடி பொது மயானத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டதாகவும், தோண்டி எடுக்கப்பட்ட தலை அதே பகுதியினைச் சேர்ந்த 83 வயதுடைய கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட பெண்னொருவருடைய தலையென இனங்காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

களுவாஞ்சிகுடி சுற்றுலா நீதவான் நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக களுவாஞ்சிகுடி பொலிசார் குறித்த மனிதத் தலைமை மீட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பான விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசாரும், மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் (சொக்கோ) பிரிவும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர். 


















SHARE

Author: verified_user

0 Comments: