மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடி நீர் வழங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நடமாடும் சேவை.
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடி நீர் வழங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நடமாடும் சேவையில் கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர் வழங்கள் திட்ட மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சனத் நிசந்தவினால் உடனடித்தீர்வு வழங்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு
மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பின்தங்கிய கிராம அபிவிருத்தி மனைசார் கால்நடை வளர்ப்பு
மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேமம்பாட்டு இராஜாங்க அமைச்சருமாகிய சதாசிவம்
வியாழேந்திரனின் அழைப்பின் பேரில் இராஜாங்க அமைச்சர் சனத் நிசந்த (15) இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டு
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளுக்கு
தீர்வுகளை வழங்கி வைத்தார்.
தேசிய
நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நடமாடும் சேவையில் மாவட்ட
அபிவிருத்திக் முழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன், மாவட்ட
அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன், பிரதேச செயலாளர்கள், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு
சபையின் பிராந்திய மற்றும் மாவட்ட பொறியிலாளர்கள், அரச உயர் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள்,
பொதுமக்கள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
இந்நிகழ்வில்
மாவட்ட அபிவிருத்திக் முழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்
உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு
மாவட்டத்தில் பிரதானமான குடி நீர் பிரச்சினைகள் இணங்காணப்பட்டுள்ளன. அவற்றுக்கான வேலைத்திட்டங்களையும்,
ஏற்கனவே முன்மொழியப்பட்ட திட்டங்களுக்கான அனுமதிகளையும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான
முயற்சிகளிலும் ஈடுபட்டுவருவதாகத் தெரிவித்தார்.
இதன்போது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கருத்து தெரிவிக்கையில்..
இன்றைய
நடமாடும் சேவைக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிசந்த மட்டக்களப்பிற்கு வருகைதந்தது மக்களின்
குறைகளை கேட்டறிவதற்கல்ல. அவற்றுக்கான தீர்வுகள் இன்று வழங்கப்படவுள்ளது. மேலும் மட்டக்களப்பிலுள்ள
பல கிரமங்களுக்கு குடிநீர் இணைப்புக்களுக்கான அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு இன்று
வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும் இராஜாங்க அமைச்சர் சனத் நிசந்த இங்கு கருத்து வெளியிடுகையில்…
தேசிய
நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையினால் 40 வீதமான குடிநீர் தேவைகளே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்குள் அவற்றை 85 வீதமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு
தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபைக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளோம். நீர் வழங்கள் சபையினால்
முடியாதவிடத்து மிகவும் பின்தங்கிய கிராமங்களுக்கு மீதமுள்ள 15 வீதத்தினை கிராமிய நீர்வழங்கள்
சங்கங்களினூடாக இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்தார்.
மேலும் குடிநீர் தொடர்பான பிரச்சினைகளை எனக்குத் தாருங்கள் அவற்றை நிவர்த்தி செய்யத்
தேவையான போதுமான நிதி உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.
இதுதவிர
இம்மாவட்டத்திலுள்ள சிறுநீரகம் தொடர்பான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ள பிரதேசங்களை
அடையாளப்படுத்தி மாவட்டரீதியான திட்டம் ஒன்றை வழங்குமாறும் இவ்வருடத்திற்குள் அப்பிரதேசங்களுக்கு
சுத்தமான குடிநீர் வசதியினை வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment