மண்முனைப் பற்றில் நடைபெற்ற கதாபிரசங்க போட்டி நிகழ்வு.
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரிவிலுள்ள அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு நடாத்திய கதாபிரசங்க போட்டியை நடாத்தியிருந்தது.
இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குரிய பரிசில்கள் வழங்கும் நிகழ்வு மண்முனைப் பற்று பிரதேசசெயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலகத்தில் வெள்ளிக்கிழமை(26) நடைபெற்றது.
அறநெறிப்பாடசாலை மாணவர்கள் மத்தியில் கலைகலாசார விழுமியங்களை மேம்படுத்தும் நோக்குடனும் ஆன்மீக ரீதியான ஆர்வத்தை கலைத்துறையூடாக வெளிப்படுத்தும் தீர்க்க தரிசனப்பார்வையுடனும் கதாப்பிரசங்க போட்டிகள் நடாத்தப்பட்டன.
இப்பரிசழிப்பு நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், கலாவார பரிவினர், அறநெறிப்பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment