20 Feb 2021

உதயகுமார் கல்வி மையத்தின் ஊடாக கல்வி கருத்தரங்கு.

SHARE

உதயகுமார் கல்வி மையத்தின் ஊடாக கல்வி கருத்தரங்கு.

உதயகுமார் கல்வி மையத்தின் ஊடாக "வளர்ச்சியின் உச்ச நிலை கல்வி " எனும் தொனிப் பொருளில் கல்வி கருத்தரங்கு நாவற்காடு நாமகள் வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

சனிக்கிழமை (20) மண்முனை மேற்கு வலயத்திற்கு உட்பபட்ட மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பரமேஸ்வரா வித்தியாலயம், நாவற்காடு நாமகள் வித்தியாலயம், மகிளவட்டவான் மகா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளில் இவ்வருடம் .பொ.சாதாரணதர பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கான கல்வி கருத்தரங்கானது அக்னிச் சிறகுகள் ஏற்பாட்டில் உதயகுமார் கல்வி மையத்தின் முழு நிதி அனுசரணையுடன் நடைபெற்றது.

இன்  நிகழ்வில்  வலயக் கல்விப் பணிப்பாளர்  அகிலா கனகசூரியம் அதிதியாக கலந்துகொண்டு கல்வி கருத்தரங்கை ஆரம்பித்து வைத்தார், நாவற்காடு நாமகள் வித்தியாலய பிரதி அதிபர் .திருச்செல்வம், வளவாளராகக் கலந்து கொண்டிருந்தார் மேலும் இதன்போது   நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் .ராமச்சந்திரன், அக்னிச் சிறகுகள் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளரும், உதயகுமார் கல்வி நிலையத்தின் செயலாளருமான .ஜெயக்கொடி, உதயகுமார் கல்வி நிலையத்தின் பொருளாளர்.திருமதி அனோஜன் விதுசா, இணைப்பாளர் .கோபாலசிங்கம், அக்னிச் சிறகுகள் பேரவை உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: