வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அதிகஸ்ற்றப் பிரதேசமான வம்மியடியூற்று வாணி வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினால் கற்றல் உபகரணங்கள் செவ்வாய்கிழமை(16) வழங்கி வைக்கப்பட்டன.
வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளர் ந.நேசகஜேந்திரன், இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளைத் தலைவர் த.வசந்தராசா, அச்சங்கத்தின் பொருளாளர் வ.சக்திவேல், மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது 25000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையினரால் வழைக்கி வைக்கப்பட்டன.
தமது பாடசாலைக்கு கேட்கும்போதல்லாம் இவ்வாறு மனமுவந்து உதவி செய்துவரும் செஞ்சிலுவை அமைப்புக்கு கல்விச் சமூகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அதிபர்.இதன்போது தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment