2 Feb 2021

நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.

SHARE

நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்து துவம்சம் செய்த யானைக்கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பிரதேசத்தில் தொடர்ந்து காட்டு யானைகளின் தாக்குதல்களும் அட்டகாசங்களும் அச்சுறுத்தி வருவதோடு, பல அப்பாவி மனித உயிர்களையும் காவு கொள்வதோடு. புல பயன்தரும் வழங்களையும் காட்டுயானைகள் துவம்சம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் அங்கலாய்கின்றனர்.

இந்நிலையில் மாட்டவட்டத்தின் வவுணதீவுப் பிரதேசத்தின் நெடியமடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை(31) இரவு 10.30 மணியளவில் புகுந்த காட்டுயானைகள், அங்கிருந்த பயன்தரும் தென்னம் தோட்டத்தை அழித்துவிட்டுச் சென்றுள்ளது. இதனால் 26 தென்னைகள் இவ்வாறு காட்டுயானைகளினால் முற்றாக துவம்சம் செய்யப்பட்டுள்ளன.

 இவ்வாறு தமது தென்னம் தோட்டத்தை அழிக்கும் யானைகளைத் துரத்துவதற்கு முனைந்த அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீப்பந்தம் ஏந்தியும், கூக்குரலிட்டும், பட்டாசு கொழுத்தியும், அந்த யானைகள் அதனைவிட்டு அகலாமல் மக்களைத் தாக்குவதற்கு துரத்தி வந்துள்ளன. வனஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களுக்கு அறிவித்தும் அவர்கள் உரியநேரத்திற்கு அவ்விடத்திற்குச் சமூகம் கொடுக்கவில்லை. எனவும் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு அரசாங்கம் உரிய இழப்பீட்டையும்  வழங்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.







SHARE

Author: verified_user

0 Comments: