ஆரையம்பதியில் இடம்பெற்ற 73வது சுதந்திர தின நிகழ்வு
இலங்கைத் திருநாட்டின் 73 வது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம் நாடு பூராகவும் இடம் பெற்றுவரும் நிலையில் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திலும் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் இன்று (04) காலை 8.00 மணியளவில் சுதந்திர தின நிகழ்வுகள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றியவாறாக உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதனைத் தொடர்ந்து
மௌன இறைவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில் தேசிய சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தியதான உரையினை பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி அவர்கள் நிகழ்த்தியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளரினால் மாவிலங்கத்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவில் பயன்தரும் மரங்களை நாட்டியதுடன், காரியாலய சுற்றுச் சூழலை சிரமதானம் மூலமாக சுத்தப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment