7 Feb 2021

காணாமல் போனவரின் சடலம் 5 நாட்களின் பின்னர் ஆற்றிலிருந்து மீட்பு.

SHARE

காணாமல் போனவரின் சடலம் 5 நாட்களின் பின்னர் ஆற்றிலிருந்து மீட்பு.

இம்மாதம் 02ஆம் திகதி காணாமல்போயிருந்த நிலையில் தேடப்பட்டு வந்த மீனவரின் சடலத்தை மயிலவெட்டுவான் ஆற்றிலிருந்து சனிக்கிழமை 06.02.2021 மீட்டெடுத்ததாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

களுவன்கேணியைச் சொந்த இடமாகவும் கரடியன்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட அரசையா பாலசுந்தரம் (வயது 52) என்பவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இவர் காணாமல்போன இடத்திலிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தூரத்திலுள்ள ஆற்றிலிருந்தே சடலம் மிதந்து கொண்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் மீட்கப்படும்போது சடலத்தின் இரு கால்களும், இரு கைகளும் சிதைவடைந்திருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர் ஆற்றைக் கடக்கும்போது முதலையிடம் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் உடற்கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.




SHARE

Author: verified_user

0 Comments: