(ரகு)
சுபீட்சமான நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் 43 வீட்டுரிமையாளர்களுக்கு முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு.
நாட்டை கட்டியெலுப்பும் சுபீட்சமான நோக்கு எனும் வேலைத்திட்டத்தின் கீழ் பிரதம மந்திரி மகிந்த ராஜபக்ஸ அவர்களது வழிகாட்டலில் உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம் எனும் திட்டத்திற்கு அமைவாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கும் ஒரு வீடு என்ற அடிப்படையில் நாடு பூராகவும் 16 ஆயிரம் கிராம உத்தியேகத்தர்கள் பிரிவுகளில் வீடுகளை நிர்மானிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 250 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் 43 வீட்டுரிமையாளர்களுக்கான முதற்கட்ட நிதி வழங்கிவைக்கும் நிகழ்வு சனிக்கிழமை(27) மட்டக்களப்பு தேசிய வீடமைப்பு அதிகார சபையில் மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டிருந்தார். மேலும் இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், உதவித்திட்டப் பணிப்பாளர் திருமதி.பு.சசிகலா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி த.ஈஸ்வரராஜா. முற்போக்கு தமிழர் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment