40நாட்களின் பின்னர் காத்தான்குடி நகரில் தனிமைப்படுத்தல் நீக்கப்பட்ட 10 கிராம சேவகர்பிரிவுகளில் வர்த்தக நிலையங்கள் திறப்பு.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதிமுதல் மூடப்பட்டிருந்த
காத்தான்குடி நகரின் 10 கிராம சேவகர் பிரிவுகளிலும் வர்த்தக நிலையங்கள் திங்கட்கிழமை(09) காலை முதல் திறக்கப்பட்டிருந்தன.
கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் கொரோனா பரவல் அதிகரிப்பை அடுத்து காத்தான்குடி
பிரதேச செயலகப்பிரிவின் 18 கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு
உட்படுத்தப்பட்டிருந்தது..
தொடரான அன்டிஜன் பரிசோதனைகளை அடுத்து குறித்த பிரதேசத்தின்
8 கிராம சேவையளர் பிரிவுகளில் ஏற்கனவே தனிமைப்படுத்தல் சட்டம் நீக்கப்பட்டது.
தொடர்ந்தும் கடந்த 40 நாட்களாக 10 கிராம சேவகர் பிரிவுகளில்
தனிமைப்படுத்தல் சட்டம் அமுலில் இருந்தது. திங்கட்கிழமை 9ஆம் திகதி முதல் 4 வீதிகளைத்தவிர
10 கிராமவேசகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படுவதாக மாவட்ட அரசாங்க
அதிபர் கே.கருணாகரன் அறிவித்ததையடுத்து வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தததுடன்
பாடசாலைகள் பள்ளிவாயல்கள் என்பனவும் திறக்கப்பட்டன. இத்து டன் வழமையான அலுவல்கள் இடமபெற்று வருகின்றன.
0 Comments:
Post a Comment