“இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” நூல் வெளியீட்டு விழா.
நூலாசிரியர் அமலநாதன், அலுவலக நிருவகிப்புத் தொடர்பாக தேசிய மட்டம் வரை பல உற்பத்தித்திறன் விருதுகளை வென்றவர். பல்கலைக்கழகங்கள் முதலான தாபனங்களின் வளவாளராகவும் மற்றும் ஆலோசகராகவும் செயற்பட்டு வருகின்றார். பல்வேறு நூல்களையும் உருவாக்கியுள்ளார். இவர் நிருவகிப்புத் தொடர்பாக 34 இற்கு மேற்பட்ட நாடுகளுக்குச் சென்று நிருவாக அறிவூட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
“இலங்கையின் அரச அலுவலக நிருவாகமும் சமகால நடைமுறைகளும்” எனும் நூலானது 12 அத்தியாயங்களின் கீழ் 113 உப தலைப்புக்களில் உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு அத்தியாய முடிவிலும் ஆசிரியர் அடையாளப்படுத்தியுள்ள வினாக்கள் அவரது அனுபவம் சார்ந்த எதிர்வு கூறல்களாக இருக்கும். இந் நூலைக் கொண்டு பரீட்சாத்திகள் மட்டுமன்றி அலுவலக பணியாளர்கள் தமது சந்தேகங்களை தீர்த்து கொள்வதோடு அலுவலக நிருவாகம், நிதிக் கையாள்கை, பெறுகை நடவடிக்கைகள் மற்றும் ஒழுக்காற்று விசாரணைகளையும் முறையாக மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் இந் நூல் வடிவமைக்கப் பட்டுள்ளது.
அலுவலக பணியாளர்களுக்கு மட்டுமின்றி ஒப்பந்தகாரர், அலுவலக நிருவாகத்தை கற்றுக்கொள்ளும் பல்கலைகழக மாணவர்கள், அரச அலுவலகங்களை அணுகுவோருக்கும் இந் நூல் மிகப் பயனுடையதாக இருக்கும். இந் நூலானது ஏ5 அளவிலும் 500 பக்கங்களை கொண்டதுமாக அமைந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
0 Comments:
Post a Comment