30 Jan 2021

கரடியனாறு மகாவித்தியாலயம், நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சாதாரணதரம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு.

SHARE

கரடியனாறு மகாவித்தியாலயம், நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சாதாரணதரம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கு.

மட்டக்களப்பு மேற்கு - கரடியனாறு மகாவித்தியாலயம், நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் சாதாரணதரம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள் நடைபெற்றது

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள  கரடியனாறு மகாவித்தியாலயம் மற்றும் நாவற்காடு நாமகள் வித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் .பொ சாதாரணதரம் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்குகள்  கரடியனாறு மகாவித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் .செந்தில்நாதன் தலைமையில் புதுமை அமைப்பின் அனுசரணையுடன்  சனிக்கிழமை (30) ஆரம்பமானது.

மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்விப் பணிப்பாளரின்  ஆதரவுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் .செந்தில்நாதன், புதுமை அமைப்பின் நிருவாக உறுப்பிர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் சுமார் 65  மாணவர்கள் வருகை தந்து பங்குபற்றினர்.

பரீட்சைக்கு தோற்றவிருக்கும் பின்தங்கிய பிரதேசத்தின் மாணவர்களின் நலன்கருதி தமது புதுமை அமைப்பின் ஊடாக இவ்வாறான கல்வி வளர்ச்சிக்கான திட்டங்களை தாம் முன்னெடுத்துள்ளதாக இவ் அமைப்பின் பிரதிநிதிகள் இங்கு கருத்துத் தெரிவித்தனர்.

எமது பிரதேச மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் இராஜாங்க அமைச்சர் .வியாழேந்திரன் அவர்களின் பணிப்புக்கமைவாக இவ் அமைப்பினர் சிறந்த பங்கினை ஆற்றி வருகின்றமை பாராட்டுக்குரியது என பாடசாலை அதிபர் .செந்தில்நாதன் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: