மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கிராமங்கள் தோறும் சந்திரகாந்தன் எம்.பி விஜயம்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்து அவர்களுக்கான உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முன்னெடுத்துள்ளார்.
இதற்கமைவாக வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கும்புறுமுலை, சுங்கான்கேணி, கிண்ணையடி, கறுவாக்கேணி போன்ற பல்வேறு கிராமங்களுக்கு செவ்வாய்கிழமை (26)
விஜயம் செய்தார்.
அனைத்து கிராமங்களிலும் பொதுமக்களினால் அவருக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டன. இதன் போது கிராம மக்களினால் பொன்னாடை போர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவிக்கப்பட்டார்.
சமய வழிபாடுகளில் ஈடுபட்ட அவர் கிராமங்களில் நிலவும் குறைபாடுகள் தொடர்பில் மக்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அவர் ஒவ்வொரு கிராமங்களிலும் கிராமத்துக்கு தேவையான சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட கல்வி அபிவிருத்தியில் அதிக கவனம் செலுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்
0 Comments:
Post a Comment