மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.கல்முனை-மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்துவரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நொச்சிமுனை, நாவற்குடா,கல்லடி,வேலூர்,கூழாவடி,மாமாங்கம்,குமாரபுரம்,புன்னைச்சோலை,இருதயபுரம்,கறுவப்பங்கேணி,பாரதி வீதி,எல்லை வீதி உட்பட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் பலர் உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கியுள்ளதை காணமுடிகின்றது.இவ்வாறு வீதிகளில் காணப்படும் வெள்ளநீரை வெளியேற்றும் செயற்பாடுகளில் மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொண்டு வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.பொதுமக்களின் குடிசைகளிலும்,வீடுகளிலும், காணிகளிலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளதுடன் வெள்ள அனர்த்தம் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பாதிக்கப்பட்டவர்களின் இடங்களையும்,பிரதேசங்களையும் பார்வையிட்டு வருகின்றார்கள்.
இதேநேரம் படுவான்கரையின் பல பகுதிகளில் வெள்ள அபாயம் காணப்படுவதாக அங்கிருந்துவரும் பொதுமக்கள்,வாகன சாரதிகள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போரதீவுப்பற்று,பட்டிப்பளை,வவுணதீவு,ஏறாவூர்ப்பற்று,கிரான்,மண்முனைப்பற்று,பிரதேச செயலகப்பரிவுகளில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளது.வெல்லாவெளி பிரதேசத்தில் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து தமது உறவினர்களின் வீட்டில் வசித்து வருவதுடன் ஒருவீடு மழை காரணமாக சேதமடைந்துள்ளதாக போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு அரசினர் ஆசிரிய பயிற்ச்சி கலாசாலை வளாகத்தில் வெள்ளநீர் காணப்படுவதுடன் மட்டக்களப்பு புகையிர தினைக்களத்தின் வளாகத்திலும்,ரயில் தண்டவாளங்களும் வெள்ளத்தில் முழ்கி காணப்படுகின்றது.வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகம்,மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு துரித நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றார்கள்.
0 Comments:
Post a Comment