வயல் அறுவடை நிகழ்வும் உயிரியல் பசளை பயன்படுத்தல் தொடர்பான ஆய்வும்.
மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வயல் அறுவடை நிகழ்வும் உயிரியல் பசளை பயன்படுத்தல் தொடர்பான ஆய்வும் மண்முனை மேற்கு பிரதேசத்தில் நடைபெற்றது.மட்டக்களப்பு மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வயல் அறுவடை நிகழ்வும் உயிரியல் பசளை பயன்படுத்தல் தொடர்பான ஆய்வும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேசத்தில் புதன்கிழமை (20) நடைபெற்றது.
விவசாயத்திணைக்களம் மற்றும் விவசாய அமைச்சின் ஆராச்சி பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட இந் நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தலைமையில் நடைபெற்றது.
உயிரியல் பசளை பயன்படுத்தல் தொடர்பான ஆய்விற்கென விவசாயி ஒருவரின் வயல் நிலம் தெரிவு செய்யப்பட்டு அதில் ஒரு பகுதிக்கு உயிரியல் பசைளையினை பயன்படுத்தி செய்கை பண்ணப்பட்ட வயலினையும் மறு பகுதிக்கு விவசாயிதான் வருடாந்தம் பயன்படுத்தும் பசளையினையும் இட்டு செய்கை பண்ணப்பட்ட வயலினையும் அறுவடை செய்து இரண்டு நெல் உற்பத்தியையும் ஆய்வு செய்ததில்.
விவசாய அமைச்சின் அனுசரனையில் உயிரியல் உரம் பயன்படுத்தி செய்கை பண்ணிய வயலில் 60 வீதமான விளைச்சல் அதிகரித்துக் காணப்பட்டது என கண்டி மாவட்ட விவசாய ஆராச்சி பிரிவின் ஆராச்சி அதிகாரி ஏ.கே.பத்திரண தெரிவித்தார்
அத்துடன் இவ்வாராச்சிப் பிரிவின் குறித்த பசைளை பாவனை திட்டத்தின் மூலம் ஒரு ஏக்கருக்கு சுமார் 720 கிலோ கிரேம் நெல் கூடுதலாக விளைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்வாறான ஆராச்சிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான், ஆயித்தியமைலை, பாவற்கொடிச்சேனை, கொக்கட்டிச்சோலை மற்றும் வெல்லாவெளி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படுவதாக இந்நிகழ்வில் கலந்து கொண்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் வீ.பேரின்பராஜா தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment