6 Jan 2021

மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் நியமனம்

SHARE

மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் நியமனம்.

மட்டக்களப்பில் இயங்கி வரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளராக அப்துல் லத்தீப் இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அதன் நிமித்தம் மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய நிலையத்தில் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் இவர் கல்முனை பிராந்திய இணைப்பாளராகக் கடமையாற்றிய நிலையில் மட்டக்களப்புக்கு இடமாற்றம் வழங்கபப்ட்டுள்ளது.

இதேவேளை இதற்கு முன்னர் மட்டக்களப்பு பிராந்திய இணைப்பாளராகப் பணியாற்றிய ஏ.சி. அப்துல் அஸீஸ் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய இணைப்பாளராக இடமாற்றம் வழங்கப்பட்டதையடுத்து அங்கு கடமைப் பொறுப்பேற்றுள்ளார்.


SHARE

Author: verified_user

0 Comments: