தும்பங்கேணி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்.
மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பங்கேணி பிராhன வீதியில் செவ்வாய்கிழமை(26) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….
பார ஊர்தியில் மண் ஏற்றுவதற்காகச் தும்பங்கேணி பிரதான வீதியில் பணித்த வாகனம் வீதியின் அருகில் நின்ற மரத்தின் மீது மோதியுள்ளது. இதனால் மரக்கிளை ஒன்று பார ஊர்தியின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு சாரதியின் நெஞ்சுப் பகுதியில் மிகவும் பலமாக தாக்கியுள்ளது. இதப்போது சாரதி இஸ்த்தலத்திலேயே உயிழிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்துவர் கிறிஸ்டியன் வீதி பெரியகல்லாறு- 2ஜ சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான 36 வயதுடைய கீர்த்தி டானியல் ஸ்ரீகாந் எக அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்நிலையில் களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கு அமைவாக இஸ்த்திற்குச் சென்ற மண்டூர் பிரேதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி உத்தரவிட்டுள்ளார்
உடல் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment