தேத்தாதீவு தோணா பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு.
மட்டக்களப்பு மாவாட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட தேத்தாதீவு தோணா பகுதியிலிருந்து உருக்குலைந்த நிலையிலிருந்து 72 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை(08) மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிவித்தனர்.
தேத்தாதீவு தோணா பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கிடைப்பதாக பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் உரிய இடத்திற்கு விரைந்த பொலிசார் சடலத்தைப் பார்வையிட்டு மீட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி திடீர் மரண விசாரனை அதிகாரி சிதம்பரப்பிள்ளை சீவரெத்தினம் குறித்த இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், குறித்த சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிசாருக்குத் அறிவித்துள்ளதுடன், மேலதிக விசாரனைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் களுதாவளை 4 ஆம் பிரிவைச் சேர்ந்த மாணிக்கம் இரத்தினசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி திடீர் மரண விசாரனை அதிகாரி தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment