மண்முனைப் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா.
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதிக்கும், எழுவாங்கரைப் பகுதிக்கும், விவசாய தொழிலின் இணைப்பு பாலமாக திகழும் உழவர்கள் செறிந்துவாழும் மண்முனைப்பற்று பிரதேசத்தின், வேடர்குடியிருப்பு கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் ஆலய முன்றலில் இவ்வாண்டிற்கான பிரதேச பொங்கல் விழா வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் ஆலோசனையின் பெயரில் மண்முனைப்பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.குணரெட்ணம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனைப்பற்று பிரதேச சபையின் வேடர்குடியிருப்பு வட்டார பிரதேச சபை உறுப்பினர் சத்தியன் மண்முனைப்பற்று பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ருபேசன் சுந்தரலிங்கம், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிருவாக சபையினர் மற்றும் பொதுமக்கள், உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது இந்த ஆண்டிற்கான மண்முனைப்பற்று பிரதேச பொங்கல் விழாவிற்கான புத்தரிசியை புதுப்பானையில் மண்முனை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் கி.குணரெட்ணம் அவர்கள் இட்டு நிகழ்வினை ஆரம்பித்துவைத்தார்
கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஆலய முன்றலில் தமிழர் பாரம்பரியத்தைப் பேணி ஆலய நிர்வாக சபையினர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து தங்களுடைய புதுப்பானைகளில் புத்தரியிட்டு பொங்கல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். புதுப்பானையில் பொங்கல் பொங்கிய வேளையில் கதிரவன் கலைக் கழகத்தினரின் கவிகரங்கமும், சுளகு நடனம் தமிழர் கலாசார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலே கலைநிகழ்வுகளும், இலங்கேஷ்வரன் இசைக்குழுவினரின் பஜனை நிகழ்வு நிகழ்வைச் சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment