4 Jan 2021

மட்டு நகரில் கொட்டும் மழையில் ஹெரோயின் கடத்தல் இரு முச்சக்கர வண்டிகளுடன் இருவர் ஹெரோயினுடன் கைது

SHARE

மட்டு நகரில் கொட்டும் மழையில் ஹெரோயின் கடத்தல் இரு முச்சக்கர வண்டிகளுடன் இருவர் ஹெரோயினுடன் கைது.

மட்டக்களப்பு நகரில் கொட்டும் மழையைப் பயன்படுத்தி சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளைக் கடத்திய இருவரை மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்துள்ளதுடன் கடத்தலுக்குப் பயன் படுத்திய இரு முச்சக்கர வண்டியையும் ஒருவரிடமிருந்து 19கிராம் மற்றும் 20மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளையும் மற்றவரிடமிருந்து 2கிராம் ஹெரோயினையும் கைப்பற்றியுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பரிவு பொறுப்பதிகாரி .பி.பண்டார தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை (04) இரவு 10மணியளவில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் தாம் செலுத்திவந்த  முச்சக்கரவண்டிகளைத் பொலிசாரைக் கண்டு திருப்பிக் கொண்டு செல்ல முற்படுகையில் சந்தேகமடைந்த பொலிசார் முச்சக்கர வண்டிகளை சோதனையிட்டபோது இப்போதப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

மாவட்ட சிரேஸ்ட  பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலில் குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி .பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினரே இவர்களைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிசினூடாக மட்டக்களப்பு நீதிவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.




SHARE

Author: verified_user

0 Comments: