14 Jan 2021

கொரோ அச்சத்தின் மத்தியிலும் கிழக்கில் அமைதியான தைப்பொங்கல் கொண்டாட்டங்கள் இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள்

SHARE

கொரோ அச்சத்தின் மத்தியிலும் கிழக்கில் அமைதியான தைப்பொங்கல்  கொண்டாட்டங்கள் இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள்.

கொரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் சுகாதார நடைமுறைகளைப்பேணி  தைப்பொங்கல்  பண்டிகையை கிழக்கு மாகாண இந்து மக்கள் மிகவும் அமைதியாகக் கொண்டாடி வருகின்றனர். பல இந்து ஆலயங்களில் தைப்பொங்கல் நான் காலை  முதல் விசேட தைப்பொங்கல பூசை வழிபாடுகள்; இடம்பெற்றன.

 ஆலயங்களில் சுகாதார விதிமுறைகளின்படி குறிப்பிட்ட அளவு பக்தர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். முகக்கவசம் அணிந்துகைகளைக் கழுவி சமுக இடைவெளிகளைப்பேணி பக்தார்கள் பொங்கல் பூசை வழிபாடுகளில் பங்கேற்றதை அவதானிக்க முடிந்தது.

பிரதான பூசை வழிபாடுகள் மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தில் பிரதம பூசகர் பிரபாகரன குருக்கள் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.

கடைகள் வீடுகள் பாடசாலைகளிலும் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.















SHARE

Author: verified_user

0 Comments: