வெள்ளம் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் முடங்கிப்போன நலிவுற்ற கிராம மக்களுக்கு வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக உதவிகள் வழங்கி வைப்பு.
சமீபத்திய கன அடைமழை வெள்ளம் கொரோனா வைரஸ் தாக்கம் ஆகியவற்றால் முடங்கிப்போன நலிவுற்ற பின்தங்கிய கிராம மக்களுக்கு வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஒரு தொகுதி உலருணவுப் பொருட்கள் தாயக உதவித் திட்டத்தின் கீழ் சுவிஸ் தமிழர் மென்பந்து துடுப்பாட்டப் பிரிவினால் வெளிச்சம் தன்னார்வ அமைப்பினூடாக மட்டக்களப்பு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குளுவினமடு கிராம மக்களுக்கு வியாழக்கிழமை (21.01.2021) வழங்கப்பட்டது.
குளுவினமடு கிராமம் சமீபத்தில் பெய்த கன அடைமழை வெள்ளத்தினால் முற்றாகப் சூழப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தக்க தருணத்தில் தங்களுக்குக் கிடைத்த இவ்வுதவி மிகவும் ஆறுதளிக்கக் கூடியது என நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொண்ட பயனாளிக் குடும்பங்கள் தெரிவித்தன.
குளுவினமடு கிராம சேவகர் கே. சுவேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த உலருணவு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் மாற்றுத் திறனாளிகள் உட்பட தெரிவு செய்யப்பட்ட நலிவுற்ற பயனாளிக் குடும்பங்கள் 50 பேருக்கு தலா 1680 ரூபாய் பெறுமதியான அரிசி சீனி பேகாதுமை மா பருப்பு தேயிலைத் தூள் சோயா உட்பட்ட அத்தியாவசிய உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment