மலையகத்தில் உணர்வுள்ள உறவுகள் அமைப்பினரால் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு.
மட்டு மாவட்ட உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் ஏற்பாட்டில் மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் முன்பள்ளி பாலர் பாடசாலையில் கல்வியினைத் தொடரும் மலையக பிரதேசத்தின் பலாங்கொடை பெட்டிகல மாணவர்களின் நலன் கருதியும் ,கல்வி மேம்பாட்டிற்காகவும் உணர்வுள்ள உறவுகள் அமைப்பினர். அண்மையில் பெறுமதியான கற்றல் உபகரணங்களை அன்பளிப்புச் செய்தனர்.
இதன் போது உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் பிரதி நிதிகள் பாலர் பாடசாலை ஆசிரியரிடம் கற்றல் உபகரணங்களைக் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment