17 Jan 2021

மட்டக்களப்பு நகரில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து -அரசடி கிராம சேவகர் பிரிவு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டது.

SHARE

மட்டக்களப்பு நகரில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்ததையடுத்து -அரசடி கிராம சேவகர் பிரிவு முற்றாக தனிமைப்படுத்தப்பட்டது.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  மாநகரசபை பொதுச்சந்தைக்கு அருகிலுள்ள மூர் வீதியினைச் சேர்ந்த 79 வயதுடைய முதியவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை சனிக்கிழமை (17) மாலை (சனிக்கிழமை) கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து  குறித்த அசரடி கிராம சேவையாளர் பிரிவு தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. அப்பகுதி முற்றாக முடக்கப்பட்டு, வீதிகள்  மூடப்பட்டுள்ளதாக  மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார். இதனால் மாநகர பொதுச் சந்தை தனியார் வைத்தியசாலைகள் மதவழிபாட்டுத்தலங்கள் உட்பட பல வீதிகளும் முடக்கப்பட்டுள்ளன.

குறித்த நபர் சுகயீனம் காரணமாக வீட்டில் இருந்த நிலையில் சனிக்கிழமை இரவு மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து உயிரிழந்தவர் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து, நடவடிக்கையினை பொது சுகாதார ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் குறித்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் உயிழந்தவரின் சடலத்தை பார்க்க சென்றவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.























 

 

SHARE

Author: verified_user

0 Comments: