பொலனறுவை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 13 படுகாயம்.
பொலநறுவை மட்டக்களப்பு பிராதன வீதியில் வெள்ளிக்கிழமை(29) இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கி பிரயாணித்த தனியார் பேருந்து ஒன்று சம்பவதினமான வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு புணாணைப் பகுதியில் வைத்து முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முற்பட்டபோது வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் அதில் பிரயாணித்த 13 பேர் படுகாயமடைந்துள்ளர்.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் 3 பேரை மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments:
Post a Comment