23 Dec 2020

மழைவெள்ளத்திற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

SHARE

மழைவெள்ளத்திற்குரிய முன்னாயத்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்.

கடுமையான மழை வீழ்ச்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளது  இது எங்களுக்கு ஒரு சவாலாக இருந்தாலும் இந்தச் சவாலை எதிர்கொண்டு சமாளிக்கக்கூடிய முன்னாயத்தங்களை மாவட்ட ரீதியாக நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம்.

என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஏட்டில் மாட்ட அரச உயர் அதிகாரிகளுடன் வெள்ள அனர்த்த நிலைமை தொடர்பான கலந்துரையால் செவ்வாய்கிழமை (22) மாலை மட்டக்களப்பு கச்சேரியில் நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டுவிட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்  பிரதேச செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் ஏனைய திணைக்கள அதிகாரிகள் அனைவருமே கள ரீதியான செயற்பாடுகளில் இறங்கியிருக்கிறார்கள் அது தொடர்பான கலந்துரையாடல் களையும் நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

குறிப்பாக கிரான் பிரதேச செயலகப்பிரிவிலே  புலிபாய்ந்தகல்லிற்கு பிரதான வீதியில் இருந்து செல்லுகின்ற 5கிலோமீற்றர் பாதை  முழுமையாக நீரிலே மூழ்கி இருக்கிறது 4 அடி, 5 அடி உயரத்திற்கு நீர் பாய்ந்து செல்கின்றது தற்பொழுது அனர்த்த முகாமைத்துவ குழுவின்னுடைய படகு சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ராணுவம் கடற்படையினர் ஆயத்த நிலையில் இருக்கின்றார்கள். கடற்படையினரால் படகு சேவைகள் ஆயத்த நிலையில் உள்ளது. வெள்ள அபாயம் அதிகமாக காணப்படும் இடங்களுக்கு முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் மக்களை பாதுகாப்பாக பாடசாலைக்கு கொண்டு வருவதற்கும் மற்றும் பொது கட்டடங்களில் அவர்களை தங்க வைப்பதற்கும்  பாடசாலைகளை நாங்கள் ஆயத்த நிலையில் வைத்திருக்கின்றோம்

எங்களுக்கு மேலும் ஒரு பாரிய சவால் காணப்படுகின்றது அதாவது உழஎனை-19 இனால் சில நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள் அவர்களை எவ்வாறு பொது இடங்களில் வைத்துக்கொள்வது தொடர்பான பிரச்சனை உள்ளது  எனவே இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் வைத்தியர்களுடன் கலந்துரையாட இருக்கின்றோம் அத்தோடு அவர்களுக்கு  பொது கட்டிடத்தில் தனியாக ஒரு இடத்தை ஒதுக்குவது தொடர்பாகவும் அத்தோடு அந்த பகுதியிலே ஏற்படும் வெள்ள அபாயத்தை வைத்தும் அங்கிருந்து இடம்பெயருகின்ற மக்களுடைய எண்ணிக்கையை வைத்து அவர்களை எவ்வாறு தங்க வைப்பது தொடர்பாக கலந்துரையாட இருக்கின்றோம்.

இது தொடர்பாகவும் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுடன் கலந்துரையாடி இருந்தோம். எனது பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக வழங்கப்படுகின்ற வாழ்வாதார உதவித் திட்டத்தை வேகப்படுத்துவது தொடர்பாகவும் அதில்  எவ்வாறான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் உதவி திட்டமிடல் அதிகாரி மற்றும் பிரதேச செயலாளர்கள் இடமும் கலந்துரையாடல் ஒன்றை நான் மேற்கொண்டிருந்தேன். என அவர் இதன்போது தெரிவித்தார்.









SHARE

Author: verified_user

0 Comments: