28 Dec 2020

உயிர் கொடுக்கும் உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் நேசக்கரப்பணிகள் மட்டு மாவட்டத்தில் முன்னெடுப்பு

SHARE

(சுதா)

உயிர் கொடுக்கும் உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் நேசக்கரப்பணிகள் மட்டு மாவட்டத்தில் முன்னெடுப்பு.கடந்த கால யுத்தம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்டு பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ள மக்களை இனங்கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் உணர்வுள்ள உறவுகள் அமைப்பிரின் ஏற்பாட்டில் சுயதொழில் ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வாழைச்சேனை பிரதேசத்திற்குட்பட்ட கறுவாக்கேணி கிராமத்தில் நடைபெற்றது.

வறுமை காரணமாக சிறு வெற்றிலை வியாபாரத்தினை மேற்கொண்டு மிகக் குறைந்தளவான இலாபத்தின் மூலம் பொருளாதாரச் சிரமத்திற்கு மத்தியில் வாழ்க்கையினை முன்னெடுத்துவருகின்ற நிர்மலா தேவியின் பொருளாதாரத்தினை மேம்படுத்தும் நோக்கில் உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் மகளிர் குழுவில் அங்கம் வகிக்கும் கெளரிகாசினியின் மகளான யுகா அவர்களின் அகவை தினத்தினை முன்னிட்டு சிற்றுண்டிசாலைக்கான பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்வில் கறுவாக்கேணி  முத்துமாரியம்மன் ஆலய பிரதம குரு கண்ணன்  மற்றும் உணர்வுள்ள உறவுகள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனாளிக்கு பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.




SHARE

Author: verified_user

0 Comments: