தாழ் நிலப்பகுதியாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடராக பெய்து வரும் மழையினால் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வெள்ளம் அதிகரித்ததால் வெள்ள நீரை கடலுக்கு அனுப்புவற்காக புதன்கிழமை (02) மாலை காத்தான்குடி நகரசபையினால் தேங்கி நிற்கும் மழை நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
நகர சபை பெக்கோ மூலம் நகரசபை உறுப்பினர் ஜவாஹிர் மற்றும் நகர சபை ஊழியர்களால் குறித்த கடற்கரை பால்வாத்த ஓடையை வெட்டி பல இடங்களில் தேங்கிய வெள்ள நீர் கடலுக்கு அனுப்பப்பட்டது.
இதன் மூலம் வெள்ளநீர் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவது தடுக்கப்படுவதாக நகரசபை தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment