உலகையே எதிர் கொண்டுள்ள கொவிட் - 19 எனும் புதிய வகை வைரஸின் தாக்கத்தினால் மக்கள் பரிதும் பீதியடைந்துள்ளனர். அந்த வகையில் கிழக்கு மாகாணத்திதையும் தற்போது கொவிட் - 19 வைரஸ் நிலைகுலையச் செய்துள்ளது.
மனிதர்களிடத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். எனும் பரிசோதனையின் மூலம் ஒருவருக்கு கொவிட் - 19 வைரஸ் தொற்றியுள்ளதா என்பது கண்டறியப்படுகின்றது.
அதற்கிணங்க மட்டக்களப்பு மாவட்டத்திலும் ஆங்காங்கே பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன. அந்த வகையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைப்பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் சுகாதாரத் துறையினரால் வெள்ளிக்கிழமை(04) பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள கடைகளில் வேலை செய்பவர்கள், தனிமைப்படுத்தலிலிருந்தவர்களுக்கும், அப்பகுதியைச் சூழவிருந்த ஏனையோருக்குமாக 73 பேருக்கு இதன்போது பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பரிசோதனையின் முடிவுகள் இன்றயதினம் மாலை தெரியவரும் என இதன்போது சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment