வாவியில் நீராடிக்கொண்டிருந்த வேளை குடும்பஸ்த்தர் ஒருவர் காணாமல்போயுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டம் களூவஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழுகாமத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டக்களப்பு வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது காணாமல் போயுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….பழுகாமத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க ஞானசேகரம் என்பவர் புதன்கிழமை(30) மாலை பழுகாமத்தில் மட்டக்களப்பு வாவியை ஊடறுக்கும் ஆற்றுக்கட்டுப் பாலத்தின் கீழ் நீராடியுள்ளார். இன்போதே அவர் காணாமல்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றிக்கலாமோ எனவும் ஆற்றுக்கட்டுப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுபவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆற்றில் காணாமல்போன குறித்த நபர் வியாழக்கிழமை(31) காலை வரை கிடைக்காத இந்நிலையில் படகுமூலம் தேடி வருகின்றனர்.
இது இவ்வாறு இருக்க தற்போது மாரி மழை காலம் ஆகையால் மட்டக்களப்பு வாவியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக நன்நீர் மீன்பிடியாளர்கள் தெரிவிக்கின்றனர். கடந்தவாரம் இவ்வாறு மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அதே பழுகாமத்தைச் சேர்ந்த குடும்பஸ்த்தர் ஒருவர் முதலையின் பிடிக்கு உள்ளாகி கால் ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தயிசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments:
Post a Comment