வெள்ள அனர்த்தத்தினால் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 9 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிரதேசத்தின் பட்டாபுரம், வேத்துச்சேனை, பழுகாமம், உள்ளிட்ட பல பகுதிகளின் தாழ் நிலங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் போதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்தள்ள சிறிய குளங்கள் அனைத்தும் மழைநீரால் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தின் பிரதான போக்குவரத்து மார்க்கமாக விழங்கும், மண்டூர் - வெல்லாவெளி பிரதான வீதியில் இரண்டு இடங்களை ஊடறுத்து தொடரந்து வெள்ளநீர் பாய்வதனால் அவ்வீதியைப் பயன்படுத்துவோர் மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறமிருக்க மட்டக்களப்பு வாவியிலிருந்து முதலைகள் சிறிய குளங்களை நோக்கி வெள்ள நீரில் வருவதாகவும், அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். முதலைகளின் நடமாட்டத்தால் நன்னீர் மீன்பிடியாளர்கள், கால்நடை வளர்ப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் மிகுந்த அச்சத்தின் மத்திக்கத்தில் செயற்பட வேண்டியுள்ளதாக அப்பகுதிவாழ் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனினும் இரைதேடுவதற்காக உள்நாட்டுப் பறவைகளுடன் பெரிய இன வெளிநாட்டுப் பறவைகளும், குளங்களை நோக்கி வருவதையும் அதவானிக்க முடிகின்றது.
போரதீவுப்பற்றுப் பிரதேசத்திள் தாழ்நிலங்களிலுள்ள வயல் நிலங்கள் அனைத்தும் வெள்ளநீர் தேங்கி அனைத்து வயல்நிலங்களும் வெள்ளக்காடாய்க் காட்சி தருகின்றன. இருந்த போதிலும் மட்டக்களப்பு முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளதனால் வெள்ளநீர் வேகமாக ஓடிவருவதையும் அவதானிக்க முடிகின்றது.
0 Comments:
Post a Comment