ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான மகளிர் மகாநாடு மட்டக்களப்பு பெரியபோரதீவில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சனிக்கிழமை (12) மாலை இடம்பெற்றது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திராகுமார் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் மகளிர் பிரிவுத் தலைவி ச.காந்தரூபி, மற்றும் பொதுமக்கள் என பலர் இதன்பேது கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்….
மக்களை மக்கள் தலைவர்கள் பிளையாக வழிநடாத்தக்கூடாது. மக்கள் தலைவர்கள் கால சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மக்களுக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பவர்களான இருத்தல் வேண்டும். தற்போது இந்த மாகாணத்திலே 58.9 வீதமாக இருந்த தமிழ் சமூகம் 38.6 வீதத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த மாகாணத்திலே வளங்கள் ரீதியாக ஏனைய சமூகங்களொடு ஒப்பிடும்போது முன்னேற்றகரம் அடையாத சமூகமாக நாம் காணப்படுகின்றோம். இந்நிலையில் அரசியல் ரீதிகாகவும் ஏனைய சமூகத்திற்கு இணையாக நாங்கள் உருவாக்க வேண்டும்.
தமிழ்ர்களுக்குப்பிரச்சனை இருக்கின்றது. ஆனால் அதற்கு தீர்வு என்ன? தமிழர்களுக்கு நிரந்தரமானதொரு அரசியல் தீர்வு தேவை. ஆனால் அதனை அடைவதற்கு நாங்கள் எதைக் கையில் எடுத்திருக்கின்றோம். கடந்த நான்கரை வருடமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாதுகாத்தது. அதன்மூலமாக தமிழ் மக்களுக்கான எந்த விடையத்தையும் அவர்களால் பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கவில்லை.
விடுதலைப் போராட்டத்தில் மரணித்தவர்களின் கனவலை நனவாக்க தற்போது யாரும் முயற்சிப்பதில்லை. மாறாக அவ்வாறு மரணித்தவர்களை வைத்து அரசியல் செய்கின்றார்கள். வடக்கு கிழக்கிலே ஒரு லெட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பவர்கள் உள்ளார்கள். மட்டக்களப்பில் மாத்திரம் 36000 உள்ளார்கள், 8000 பேர் மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள்.
பெண்களைத் தெய்வமாக வழிபடுகின்ற தமிழ் சமூகம், தற்போது தமிழ் பெண்கள் கடைகளிலும், மத்திய கிழக்கு நாடுகளிலும், கையேந்தி நிற்கின்றார்கள். இந்த நாட்டிலே 53 ஆயிரம் போர் மத்தியகிழக்கு நாடுகளிலே இங்கு மீண்டும் வரமுடியாமல் இருக்கின்றார்கள். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்திடம் தலைகுநிந்து நிற்பத வேதனைக்குரிய விடையமாகும். இதனை மாற்ற வேண்டும். எனவே தமிழ் சமூகத்தை சமூக பொருளாதார ரீதியாக முன்னேற்ற உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
முஸ்லிம்கள் அபிவிருத்திக்காகப் போராடி அவர்களின் எந்த உரிமையையும் இந்த மாகாணத்தில் இழந்ததில்லை. மாறாக எமக்கு உரிமையும் இல்லை, அபிவிருத்தியும் இல்லாமலுள்ளோம். இதுதான் உண்மை. கிராமிய அபிவிருத்தியைக் கட்டியெழுப்பவதற்கு வரவு செலவுத்திட்டத்தில் முன்மொழிவுகள் வைக்கப்பட்டுள்ளது. மக்களை நானாக இருந்தாலும் தொடர்ந்து ஏமாற்றமுடியாது. என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment