3 Dec 2020

உன்னிச்சை குளத்தில் நன்நீர் மீனவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் பிரச்சனைகளை ஆராயும் கூட்டம்

SHARE

உன்னிச்சை குளத்தில் நன்நீர் மீனவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் பிரச்சனைகளை ஆராயும் கூட்டம்.
மட்டக்களப்பு  உன்னிச்சை குளத்தில் நன்நீர் மீனவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் பிரச்சனைகளை ஆராயும் கூட்டம் இன்று உன்னிச்சை மீனவர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது

மாவட்ட நீர் உயிரின வளப்பு விரிவாக்கல் உத்தியோகத்தர் ஜெக்கப் நெல்சனின் ஏற்பாட்டில் அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன்  தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மீனவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அரசாங்க அதிபரிடம் முன்வைத்தனர்.
 
மீனவர்கள் முக்கியமாக எதிர்கொள்ளும் பிரச்சனையானது கொடைகாலங்களில் குளத்தில் நீர் வற்றுகின்ற காலத்தில் மீன்களின் பெருக்கம் வளர்த்தி என்பன இல்லாமல் பொகின்றன இதனால் தங்களின் தொழில் முற்றாக பாதிப்படைகின்றது குளத்தினை நம்பிய 250 மீனவ குடும்பங்கள் உள்ளனர் இவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுகின்றது இதற்கு மாற்றிடான வளியாக குளத்தின் நீர் மட்டத்தினை நிலையான அளவிற்கு பேனப்படும்போது இந்தப்பிரச்சனைக்கு தீர்வுகிடைக்கும் என மீனவர்கள் குறிப்பிட்டனர்.

மாவட்டத்தின் போசனை மட்டத்தினையும் நாட்டின் பொருளாதார வழர்ச்சிக்கு எமது மீனவமக்களின் பங்களிப்பு பாரியதாக அமையும் என மீனவ சங்கதலைவர் குறிப்பிட்டார்
 
அரசாங்க அதிபர் குறிப்பிடுகையில் உங்களை போன்ற ஊக்கமுள்ள தொழிலாளர்களுக்கு கண்டிப்பாக அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை உரியகாலத்தில் செய்வதற்கு தயாராகவுள்ளது  எதிர்காலத்தில் செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்வுள்ளதாக் அரசாங்க அதிபர் குறிப்பிட்டார்.

இன் நிகழ்வில் மண்முனை மேற்கு வவுனதீவு உதவி பிரதேச செயலாளர் திருமதி சதா சுபா மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார்இ மண்முனை மேற்கு பிரதேச  பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சபேஸ். மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன் ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.







SHARE

Author: verified_user

0 Comments: