காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 70 பேர் குணமடைந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்பினர்.
மட்டக்களப்பு காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 70 குணமடைந்து திங்கட்கிழமை(07) மாலை தமது சொந்த இடங்களுக்கு திரும்பியதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இவ்வாறு சிகிச்சை பெற்று திரும்பியவர்களில் பலர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது இவர்கள் திங்கட்கிழமை மாலை பிற்பகல் சுகாதார திணைக்களத்தின் பஸ் வண்டி மூலம் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்குள்ளாகிய மேலும் 59 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment