6 Dec 2020

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கௌரவிப்பு.

SHARE
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு கௌரவிப்பு.
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளை அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழிற்  சங்கம் பாராட்டி கௌரவிப்பது வழமை, அந்த வகையில் அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த வருடங்களில் நடாத்த முடியாமல் போயிருந்த பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வானது,  எதிர்வரும் ஆண்டில் நடாத்துவதற்கு தொழிற்சங்கம் திட்டமிட்டுள்ளது.

கடந்த 2019, 2020 ஆம் வருடங்களில் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய (மாவட்ட மட்டத்தில் வெட்டு புள்ளிகளுக்கு மேல் புள்ளிகள் பெற்ற) அனைத்து முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்  தொழிற்சங்கத்தில்  உறுப்பினராக  பதிவு செய்துள்ள  முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளது விபரங்களை தொழிற்  சங்கம்   திரட்டிவரும் நிலையில்  மாணவர்களது விபரங்களை மிக விரைவாக தங்களுக்கு அனுப்பிவைக்குமாறு தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.

அதேவேளை பிற்போடப்பட்டிருந்த 2017 மற்றும் 2019 ஆம் வருடங்களில்  சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு இடம்பெறவுள்ளதுடன், குறித்த ஆண்டுகளில்  ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லையென்பதும்  குறிப்பிடத்தக்கது.

ரூபா 15 ரூபா முத்திரை ஒட்டி, சுய விலாசமிட்ட காகித உறை ஒன்றினை கீழ் வரும் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பப் படிவங்களை பெற்று, பூரணப்படுத்தி 2020.12.25 இற்கு முன் அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :

The Secretary General

All Management Service Officers Trade Union

101 C, Jalaldeen Road,

Addalaichenai - 04


மேலதிக விபரங்களுக்கு:
77 3122 722, 77 2255 285 ஆகிய தொலைபேசி இலக்ககங்களில் ஒன்றுடன் தொடர்பு கொள்ளுமாறு தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.



SHARE

Author: verified_user

0 Comments: