25 Nov 2020

மட்டு.மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தழிப்பு மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்.

SHARE

மட்டு.மாவட்டத்தில் பாரிய கடல் கொந்தழிப்பு மீன்பிடி நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீன்பிடி நடவடிக்கைகள் முழுமையாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக புதிய காத்தான்குடி ஏத்துக்கால் பூநொச்சிமுனை நாவலடி வாகரை உட்பட பல மீன்பிடி பிரதேசங்;களில் இக்கடல் கொந்தளிப்பு காணப்படுகின்றது.

கடல் கொந்தளிப்பு காரணமாக மீனவர்களை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேணடாம் என மாவட்ட வானிலை அவதான நிலையம் கேட்டுள்ளது.

இதனால் மீனவர்கள் தங்களது படகுகளையும் மீன்பிடி கலன்களையும் கரையிலிருந்து நீண்ட தூரத்தில் நிறுத்தியுள்ளனர்.

இம் மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  





















SHARE

Author: verified_user

0 Comments: