மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சொலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பிளாந்துறை தாமரைப்பூ சத்தியில் சனிக்கிழமை (14) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் இஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதன்போது பலாச்சோலையைச் சேர்ந்த 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தந்தையான எஸ்.பரணிதரன் என்பவரே உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது….
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட பலாச்சோலை எனும் கிராமத்திலிருந்து வடமுனை பகுதியில் அமைந்துள்ள அவர்களது வயற்பகுதிக்குச் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இதன்போது அம்பிளாந்துறை தாமரைப்பூ சத்தியினால் சென்று கொண்டிருந்தவேளை மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் அருகிருந்து மின்கம்பத்தில் மோதுண்டதில் ஒருவர் இஸ்த்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றய நபர் தலைமறைவாகியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த கொக்கட்டிச்சோலைப் பொலிசாரும், மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்த திடீர் மரணவிசாரணை அதிகாரி ரி.தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டார். சடலம் மட்டக்களப்பு போதனா வைத்திசாலைக்கு உடற்கூற்றாய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment