30 Nov 2020

கொரோனா அச்சம் காரணமாக கடந்த வியாழக்கிழமை மூடப்பட்ட பாடசாலை திங்கட்கிழமை மீள திறப்பு.

SHARE

கொரோனா அச்சம் காரணமாக கடந்த வியாழக்கிழமை மூடப்பட்ட பாடசாலை திங்கட்கிழமை மீள திறப்பு.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த வியாழக்கிழமை மூடப்பட்ட காத்தான்குடி பதுறியா வித்தியாலயம் திங்கட்கிழமை (30.11.2020) மீள திறக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்திலுள்ள காத்தான்குடி பதுறியா வித்தியாலயம் கடந்த வியாழக்கிழமை(26.11.2020) அன்று கொரோனா அச்சம் காணரமாக மூடப்பட்டது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணொருவரின் உறவுமுறையான மாணவியொருவர் பாடசாலைக்கு அன்றைய தினம் சமூகமளித்ததால் அச்சம் காணரமாக பாடசாலை மூடப்பட்டது.

பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை குறித்த மாணவிக்கு பி.சி.ஆர்பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்ட போது கொவிட் தொற்று இல்லையென தெரிவிக்கப்பட்டதையடுத்து பாடசாலையில் தொற்று நீக்கம் செய்ததன் பின்னர்  திங்கட்கிழமை மீண்டும் பாடசாலை திறக்கப்பட்டதாக காத்தான்குடி கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.எம்.கலாவுதீன் தெரிவித்தார்.








SHARE

Author: verified_user

0 Comments: