25 Nov 2020

நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது பெற்றார் கலாநிதி பி.பி பாலன்.

SHARE

நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது பெற்றார் கலாநிதி பி.பி பாலன்.

சமரசம் மற்றும் அமைதிக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது பிரபல சமூக சேவையாளர் கலாநிதி பி.பி பாலனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

காந்தி மேம்பாட்டு அறக்கட்டளை இந்த விருதை கடந்த ஒக்டோபெர் மாதம் அவருக்கு வழங்கியது.

சமாதானத்தை மேம்படுத்துவதில் அவர் செய்த சிறப்பான பணிகளை அங்கீகரிப்பதாக இந்த விருது உள்ளது.

கலாநிதி பாலன் கடந்த 25 ஆண்டுகளாக இந்தியா பூட்டான் இலங்கை ஆகிய நாடுகளில் உள்ள பின்தங்கிய ஒதுக்குப் புறக் கிராமங்களை அபிவிருத்தி நோக்கி நகர்த்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 

இவரது பணிகள் அவருக்கு உள்ளுர் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளன.

அவரால் மேற்கொள்ளப்பட்ட கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்காக உள்ளுர் அரசாங்க கட்டமைப்புகளில் மக்களைப் பங்கேற்க வைக்கும் நுணுக்கமான திட்டங்கள் வெற்றியளித்துள்ளன.

கிராம சமூகங்களின் திறனை வளர்ப்பதிலும் மற்றும் கிராமிய சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அதிக ஒருமைப்பாடு, பணிவு மற்றும் இரக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மற்றும் நீதி ஆகியவை உள்ளுர் அரசாங்க கட்டமைப்புகளில் பங்களிப்புச் செய்வதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும்  உதவுகின்றன.

அவரது சேவைகள் உள்ளுர் மட்டத்தில் அரசாங்க சேவைகளை ஒருமைப்பாடு மற்றும் விடாமுயற்சியுடன் வழங்குவதிலும், ஓரங்கட்டப்பட்ட அனைத்து குழுக்களின் உள்ளடக்கத்தையும் உறுதி செய்வதிலும் பங்கு வகிக்கிறது.

கலாநிதி பாலன் இந்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் ஆவார். கேரள உள்ளுர் நிர்வாகக் கழகத்தின் (KILA)    இயக்குநராக இரண்டு தடவைகள் (11 ஆண்டுகள்), சப்பரபாதவ் கிராம பஞ்சாயத்துத் தலைவராக இருந்தார். கிராமப்புற மற்றும் தொழில்துறை மேம்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் (சி.ஆர்.ஆர்.ஐ.டி) பேராசிரியர் மற்றும் இயக்குநராகவும் அவர் இருந்தார்,

மேலும் அவரது பணிகள் லண்டனின் காமன்வெல்த் உள்ளுராட்சி மன்றத்தால் (சி.எல்.ஜி.எஃப்) உள்ளுர் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்காக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அவர் உள்நாட்டிலும் பல சர்வதேச மாநாடுகளிலும்; பங்கேற்றுள்ளார்.



SHARE

Author: verified_user

0 Comments: