4 Nov 2020

வைத்தியசாலைக்கு தேவையான மேலதிகமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

SHARE

வைத்தியசாலைக்கு தேவையான மேலதிகமான வசதிகளை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன அவ்வேளைகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வருகின்ற வெளிநோயாளர்கள் தரித்திருப்பதற்கான தற்காலிக கூடாரங்களை மேலும் அதிகரித்துக் கொள்ளவேண்டிய தேவையுள்ளதாக புதன்கிழமை (04) அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரனிடன் வைத்தியசாலை நிர்வாகத்தினர் வேண்டகொள் விடுத்துள்ளனர்.

மேலும் அவர்களின் கொரிக்கையில் குறிப்பிட்டதாவது வைத்தியசாலைக்கு முன் வீதி ஒருவளிப்பாதையாக இருந்த போதும் நோயாளர்களை பார்வையிடும் நேரங்களில் அதிகளவான சன நெரிசல்கானப்படுகின்றதாகவும் வாகனங்கள் முச்சக்கர வண்டிகளின் தரிப்பிடமாகவு வைத்தியசாலையின் முன்பகுதி கானப்படுவது நோயாளர் பார்வையிடும் நேரங்களில் அதிகளவான சிரமத்தினை பொதுமக்களும் வைத்தியசாலை ஊழியர்களும் எதிர்நோக்குகின்றனர் இதணை உடணடியாக தீர்துவைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டது.

ஏதிர்காலங்களில் வைத்தியசாலையில் பணியாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்படவேண்டிய நிலை ஏற்படுமாயின் அதற்கான முன்னாயத்த நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய தேவை நமது மாவட்டத்திற்கு உள்ளது அந்தவகையில் தனியார் வீடுகளில் தங்கியுள்ள வைத்திய சாலை உத்தியோகத்தர்களுக்கு வாடகை வீடுவழங்குவதில் அதிகளவு நாட்டம் காட்டுகின்றார்கள் இல்லை அதற்கு அரசாங்க விடுதிகளை தயாராக்கிவைப்பதற்கு மாவட்ட செயலகம் ஆயித்தமாகவுள்ளனர்.

வைத்திய சாலை வேலைக்கு வருகின்ற வெளிமாவட்ட உத்தியோகத்தர்களுக்கு பிரத்தியேக பஸ் ஒன்றினை ஏற்படுத்திக்கொள்வதற்கும் இலங்கை போக்குவரத்து சபையின் மட்டக்களப்பு முகாமையர் மா.கிருஸ்ணரா இணக்கம் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் மற்றும் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி மைதிலி வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் மாநகர சபையின் மாநகர ஆணையாளர் கே.சித்திரவேல் வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர் கலந்துகொண்டனர்.  






SHARE

Author: verified_user

0 Comments: