காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் பலி.
மட்டக்களப்பு பதுளை வீதியை அண்டியுள்ள அலியாஓடை எனும் வயற் பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தரான ஆணொருவர் பலியானதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிறன்று இரவு 08.11.2020 நடந்த இச்சம்பவத்தில் சந்திவெளி கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து ஏரம்பமூர்த்தி (வயது 44) என்பவரே பலியாகியுள்ளார்.
இவர் வழமைபோன்று வயல் காவலில் ஈடுபட்டிருந்தபோது காட்டுக்குள் இருந்து பிரவேசித்த யானை இவரைத் தாக்கியுள்ளது.
ஸ்தலத்திலேயே பலியான அவரது சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டது.
இச்சம்பவம்பற்றி கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment