நீரியல் வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையம் அங்குரார்ப்பன வைபவமும் சர்வதேச மீனவர் தினமும் ஞாயிற்றுக்கிழமை(29) காலை நாவலடி பலநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீரியல்வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையம் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் நீரியல் வளங்கள் தொடர்பான விளக்கங்களும் தெளிவுபடுத்தப்பட்டதுடன் மீன்பிடி சட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் சட்டவிரோத மீன்பிடி தொர்பாகவும் இவ்வாறான சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் மீன்பிடி தொழிலை ஜீவனோபாயமாக கொண்டவர்களின் பாதிப்புக்கள் தொடர்பாகவும் மிகவும் முக்கியமாக கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் நீரியல் வளங்கள் முகாமைத்துவ ஆய்வு மையத்தின் பணிப்பாளர் கலாநிதி உ.யுவநாதன், பிரதேச இணைப்பாளர் எஸ்.குணசீலன், திட்ட இணைப்பாளர் எம்.சுரேஸ்குமார், மாவட்ட இணைப்பாளர் பு.சசிகரன் மற்றும் மீனவர்களும் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment