மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தங்களின் விடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்று என மருத்து பரிசோதனைகள் மூலம் உறுதியானவர்கள் மாவட்டத்தில் 35பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில் மாத்திரம் 31பேரும் வெல்லாவெளி பட்டிப்பளை களுவாஞ்சிக்குடி ஓட்டமாவடி ஆகிய பிரதேச செயலக பிரிவில் தலா ஒருவர் என அடையாளம் கானப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் மாவட்ட ஊடகப் பிரவுக்கு ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்தார்.
கொரோனா நோய் தொற்றுகாரனமாக தொழில் பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான 5000.00ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொருட்களை வழங்குவதற்கான நிதியினை அரசாங்க அதிபரின் துரித நடவடிக்கையினால் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல அவர்களினால் உடணடியாக நிதி விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுக்கு நேற்றுமுதல் உலர் உணவுப்பொதிகளை வழங்குவதற்கு அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.
உலர் உணவு பொருட்களை வழங்கும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றது எதிர்காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
அதிகமாக தொற்றாளர்கள் மற்றும் நோயாளர்கள் அடையளம் காணப்படுகின்ற பகுதியாக கோறளைப்பற்று மத்தி பிரதேசமே கானப்படுகின்றது அங்கு 1335பேர் தனிமைப்படுத்தலுக்கும் 31பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர் அதேபோன்று கொரோனா தொற்றாளர்கள் குறைவாக பதிவான பிரதேசமாக பட்டிப்பளை கானப்படுகின்றது இங்கு 11குடுப்பளை சார்ந்த 47பேர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் நோய்தொற்று உறுதியானவர் முதலாமவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் தொழில் நிமிர்த்தம் சென்று வந்தவர்களாகவே உள்ளனர் இவர்களுக்கான மருத்துவ உதவிகளை பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் கண்காணிப்பில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து செயற்ப்படுத்தி வருகின்றனர் இதற்காக கிழக்கு மாகாண கொரோனா தடுப்பு இணைப்பாளரான வைத்திய கலாநிதி எம்.அச்சுதன் அவர்களின் சிறந்த மேற்பார்வையில் பணிகள் மக்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment