25 Nov 2020

முகக் கவசம் அணியாத 15பேர் மட்டக்களப்பு நகரில் கைது தலா 2000 ரூபாய் அபராதம்.

SHARE

முகக் கவசம் அணியாத 15பேர் மட்டக்களப்பு நகரில் கைது தலா 2000 ரூபாய் அபராதம்.

முகக் கவசம் அணியாத 15 பேர் தனிமைப் படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக மட்டக்களப்பு கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பிரிவில் புதன்கிழமை (26) மேற்கொண்ட திடீர் தேடுதலின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டபோது நீதவான் நீதிமனற நீதிபதி ஏ.சீ.றிஸ்வான் ஓருவருக்கு  தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தார்.

இவ்வாறான அசௌகரியங்களைத் தவிர்த்து பொது மக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசங்களை அணிந்து செல்லுமாறு மட்டக்களப்பு சுகாதார பிரிவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.










SHARE

Author: verified_user

0 Comments: