6 Oct 2020

மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு

SHARE


மட்டு வாவியில் ஆணின் சடலம் மீட்பு.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  கல்லடி டச்பார் இக்னேசியஸ் விளையாட்டுக்கழக மைதானத்திற்கு அருகிலுள்ள மட்டக்களப்பு வாவியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

செவ்வாய்க்கிழமை (06) காலை குறித்த சடலம் பொதுமக்களினால் தகவல் வழங்கியதனைத் தொடர்ந்து  பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கல்லடி டச்பார் பகுதியில் வசித்துவந்த 28 வயதையுடைய ஆனொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  அடையாளம் காணமுடிந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்,  பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு,  பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. 

திங்கட்கிழமை (05) கல்லடி பாலத்திற்கு அருகாமையில் சடலமொன்று மிதப்பதை கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸார் சடலத்தை தேடிவந்த நிலையில் செவ்வாய்கிழமை (06)  சடலம் மீட்கப்பட்டுள்ளது







SHARE

Author: verified_user

0 Comments: