மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி விடுமுறையில் சென்றுள்ள கம்பஹாவை வசிப்பிடமாகக் கொண்ட பெண் தாதி உத்தியோகத்தருக்கு, அவரது சொந்த ஊரான கம்பஹாவில் வைத்து கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
வழமைபோன்று அவர் தனது கைக்குழந்தையையும் குடும்பத்தினரையம் பார்ப்பதற்காக அவ்வப்போது விடுமுறையில் கம்பஹாவிற்குச் சென்று வருவதுண்டு என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
அந்த வழமையின் அடிப்படையில்தான் இந்த தாதி உத்தியோகத்தர் கடந்த 04ஆம் திகதி விடுமுறை பெற்றுக் கொண்டு தமது சொந்த ஊரான கம்பஹாவிற்குச் சென்றுள்ளார்.
அவ்வேளையில் கடந்த 09ஆம் திகதி அவரும் அவரது கைக்குழந்தையும் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதன்போதே மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் தாதி உத்தியோகஸ்த்தரான தாய்க்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment