10 Oct 2020

ஆயுதம் மற்றும் தங்கம் இருப்பதாக கிடைத்த கதகவலையடுத்து அதனை அழ்வு செய்த படையினரும், அதிகாரிகளும் எதுவும் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.

SHARE

ஆயுதம் மற்றும் தங்கம் இருப்பதாக கிடைத்த கதகவலையடுத்து அதனை அழ்வு செய்த படையினரும், அதிகாரிகளும் எதுவும் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேத்தாத்தீவு கடற்கரையில் ஓங்கி வளர்ந்து நிங்கும் சவுக்குமரங்கள் அமைந்துள்ள பகுதியில் ஆயுதங்கள், மற்றும் தங்கம் என்பன புதைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அதனை சனிக்கிழமை (10) அகழ்வு செய்யதபோது எதுவும் கிடைக்கவில்லை என பொலிசார் தெரிவித்தனர்.

இவ்விடையம் குறித்து மேலும் தெரியவருவதாவது….

தேத்தாதீவு மயானம் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் ஓங்கி வளர்ந்து நிற்கும் சவுக்கு மரங்கள் அடர்ந்த பகுதியினுள் வெள்ளிக்ழமை(09) இரவு இனம் தெரியாத நபர்கள் மண்வெட்டி, உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றுள்ளனர். இச்சம்பவம் அறிந்த பொலிசார் வெள்ளிக்கிழமை இரவு இஸ்த்தலத்திற்கு விரைந்து நிலமையினை அவதானித்து சந்தேகத்தின் பெயரில் ஒருவரைக் கைத்து செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த இடத்தில் ஆயுதங்கள், மற்றும் தங்கம் என்பன புதைக்கப்பட்டிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

குறித்த இடத்தை அகழ்வு செய்வதற்கு நீதி மன்ற அனுமதியைப் பெற்று மண்முனை தென் எருவில் பற்று உதவிப் பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், கரையோர பாதுகாப்பு அதிகாரிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர், களுவாஞ்சிகுடி பொலிசார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர், உள்ளிட்ட அனைவரும் உரிய இடத்திற்கு வருகைதந்து, சனிக்கிழமை (10) உரிய இடத்தில் பெக்கோ இயந்திரம் கொண்டு அகழ்வு செய்தனர். 

அவ்வாறு அகழ்வு செய்தும் ஆயுதங்களோ, தங்கமோ கிடைத்திருக்கவில்லை, நிலமையினை அவதானித்த படையினர், அதிகாரிகள் அனைவரும் திரும்பிச் சென்றனர்.











SHARE

Author: verified_user

0 Comments: